என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தகவல் ஆணையம்"
- லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடுவோர் ஏராளமான மனுக்களை அனுப்பி வைக்கின்றனர்.
- தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிப்பதாக இருந்தது.
தாராபுரம் :
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அரசு துறை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவன ங்களில் இருந்து தேவை யான தகவல்களை பொதுமக்கள் கோரி பெற முடியும்.இதை பயன்படுத்தி பொதுமக்கள், தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர்கள், லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடுவோர் ஏராளமான மனுக்களை அனுப்பி வைக்கின்றனர்.இவ்வாறு வரும் மனுக்களுக்கு உரிய தகவல்களை அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலர் பணியில் இருப்பார்.
விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள், தகவல் அலுவலர் பதில் அளிக்க வேண்டும் என்பது விதி முறை. கோரிக்கை நிராக ரிக்கப்பட்டால் மனுதாரர் மேல் முறையீடு செய்யலாம்.மேல் முறையீட்டின்போது மனுதாரர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று விதிமுறை இதுநாள் வரை இருந்தது. ஒரு வேளை அவர் நேரில் வர முடியாவிட்டால் எழுத்துபூ ர்வமாக மனு தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தது. இது தகவல் உரிமை ச்சட்ட ஆர்வல ர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிப்பதாக இருந்தது. அதை கருத்தில் கொண்டு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மனித வள மேம்பாட்டுத்து றை செயலாளர் பிறப்பித்த அரசாணைப்படி மேல் முறையீட்டு மனு விசா ரணைக்கு மனுதாரர் நேரில் ஆஜராக தேவை யில்லை.இதற்கெனதகவல் ஆணை யத்தின் (மேல்முறை யீட்டு நடைமுறை) விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்ப ட்டுள்ளது.மேல் முறையீடு மனு மீதான விசாரணை நடத்தும்போது நேரடியாக ஆஜராவதற்கு பதிலாக வீடியோ கான்பரன்ஸ் முறையிலும் ஆஜராகலாம்.இதை தனக்குள்ள அதிகா ரத்தை பயன்படுத்தி ஆணையமே முடிவு செய்யலாம் என்று உத்தர வில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூரை சேர்ந்த தகவல் உரிமைச்ச ட்ட ஆர்வலர்கள் கூறுகை யில், இந்த திருத்தம் காலத்துக்கு ஏற்ற மிகவும் அவசியமான திருத்தம். இதன் மூலம்தகவல் கோரும் மனுதாரர்கள், அதிகாரிகள் அலைச்சல் தவிர்க்கப்படும். பொருட்செலவு குறையும். இதே போல தகவல் கோரி விண்ணப்பிக்கும் நடை முறையை, காலத்துக்கு ஏற்றபடி ஆன்லைன் முறைக்கு மாற்றினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
வங்கிகளில் ரூ.50 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாதவர்களின் பெயர்களை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய தகவல் ஆணையம் கேட்டது. இதுதொடர்பான வழக்கில், இந்த பெயர்களை அளிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டது.
ஆனாலும், பெயர் பட்டியலை ரிசர்வ் வங்கி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சர்யலு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ரிசர்வ் வங்கி இணையதளத்தில், தகவல் பெறும் உரிமை சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதாக கூறப்பட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு ஆணைய கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், வெளிப்படைத்தன்மை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மதிக்கவில்லை.
எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மதிக்காமல், தகவல் ஆணையத்துக்கு தகவல் அளிக்காததற்கு நீங்களே (உர்ஜித் படேல்) பொறுப்பு என்று தகவல் ஆணையம் கருதுகிறது. உங்களுக்கு ஏன் அதிகபட்ச அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கு 16-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு இந்த நோட்டீசை அனுப்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல், வாராக்கடன்கள் பற்றி ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு பிரதமர் அலுவலகம், மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றை தகவல் ஆணையம் கேட்டுள்ளது.
இதையடுத்து பி.கே.எஸ்.ஆர். அய்யங்கார் என்ற சமூக ஆர்வலர் திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நகைகள் குறித்த விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்றும் திருப்பதி கோவிலை வரலாற்று மற்றும் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்டும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவருக்கு எந்த துறையும் திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்துக்கு இதுபற்றி அய்யங்கார் கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு விரிவாக ஆய்வு செய்தார். பின்னர், அய்யங்கார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி இந்திய தொல்லியல் துறை, மத்திய கலாசார அமைச்சகம், ஆந்திர அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆகியவற்றுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும், திருப்பதி கோவிலை வரலாற்று மற்றும் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகம் எடுத்த நடவடிக்கை குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார். #TirupatiTemple
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்